Friday, September 16, 2011

முடி ஏன் கொட்டுது?

"அண்ணே, என் கேள்விக்கு பதில் சொல்லுங்க அண்ணே"

MBP 9 ஆவது மாடியில் என்னுடன் சாப்பிட வந்த சங்கர்,
" டேய் உன்ன பத்தி எனக்கு தெரியும். விவகாரமா எதுவும் கேக்காதே," என்றார்.

" அதெல்லாம் இல்லன்னே, முடி ஏன் கொட்டுது?"
"டேய், தண்ணி சரி இல்லன்னா முடி கொட்டும்டா"
"அப்போ பெங்களூர்லயே பொறந்து வளந்தவங்களுக்கு முடிங்கற பேச்சே இருக்க கூடாதே?"
"டேய், நம்ம சரியா சாப்டறது இல்ல, ஷிப்ட்ல மாறி மாறி வந்து வேல செய்றோம், தூக்கம் கேட்டு போகுது,
தேவையே இல்லாம ரொம்ப யோசிக்கறோம், மொத்ததுல nutrition பத்தாம போறதாலே முடி கொட்டுதுடா"

என்னமோ E = MC^2 கண்டுபுடிச்சி விளக்குன ஐன்ஸ்டீன் மாதிரி பெருமையா என்ன பார்த்தாரு,
அடுத்து நான் என்ன கேக்க போறேன்னு தெரியாம,


"அப்டின்னா, என் கைய பாருங்க, முடி அப்டியே தானே இருக்கு, "
"அப்றோம்," என நான் ஆரம்பிக்கும் முன்னாடி இடைமறித்து,
"அடுத்து நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும், மவனே கேட்ட, அசிங்க அசிங்கமா பேசிப்புடுவேன்" என்றார்.
"அது இல்லன்னே,
என் முகத்த பாருங்க, உங்க முகத்த பாருங்க, முடி கொட்டுதா?"
"முடிக்கு nutrition பத்தலன்னா எல்லா முடியும் கொட்டனும், அது ஏன் தலைல மட்டும் கொட்டுது?"

ரசித்து ருசித்து சாப்பிடும்போது இடையில் நாக்கை கடித்து கொண்டதைப் போல் மலங்க மலங்க விழித்தார்.
பின், சாப்பிட்ட தட்டை அங்கேயே விட்டுவிட்டு, கைகளை கூட கழுவாமல், fire exit நோக்கி ஓடத் தொடங்கினார்.
"டேய், என்னைக்கும் இல்லாம அதிசயமா, பாசமா கூப்டியேன்னு உன் கூட சாப்பிட வந்தேன் பாரு,என்ன சொல்லணும்டா!"

இவரு பெயில்.. அடுத்தது,
விக்ரம்.
கேள்விய கேட்ட உடனே, சுத்திமுத்தி நோட்டம் விட்டாரு.
ஐயய்யோ! அடிக்கதான் ஏதோ தேடராருன்னு பயந்து போய் அப்டியே 10 step backu...
சுத்திமுத்தி பார்த்தவரு, வேல செய்யற மாதிரி கீபோர்டுல எதையோ தட்ட ஆரம்பிச்சாரு.
5 நிமிடம் பொறுமையாய் இருந்து விட்டு,

"ஹலோ" என்றேன்.

"Wait dude, i am searching in google" ன்னு சொன்னாரு பார்க்கணுமே, அக்கம் பக்கம் எல்லாரும் கெக்கே பெக்கேன்னு சிரிக்க!
இவரும் பெயில்..

செண்பகராஜ்!
" என்னடா பிரச்சன இங்க?" ன்னு கேட்டுகிட்டே கிட்ட வந்தாரு!
ஆடு தலைய சிலுப்புன அப்றோம் பூசாரி எதுக்கு யோசிக்கணும், ஒரே வெட்டு!

"டேய்! எல்லாரும் தூங்கற நேரத்துல வேல செய்ஞ்சுட்டு, வேல செய்யற நேரத்துல தூங்கிகிட்டு,
4 நாளைக்கு ஒரு ஷிப்ட்னு மாறி மாறி வந்துட்டு இருக்கும் போதே
உனக்கு இவ்ளோ வாய் இருக்குதே"
"அதாண்டா! ஓவரா ஆட்டுதுன்னுதான் ஆட்டுக்கு வால அளந்து வச்சிருக்கான் ஆண்டவன்"

"அண்ணே! இது பதில் இல்ல, நீங்களும் பெயில்"
" என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?"
"டேய், உனக்காகத்தான் ஆன்சைட்ல ஒருத்தர் இருக்காரு, அவருதான் கரெக்டு உனக்கு"
என்றபடி jagguக்கு வி-நெட்ல இருந்து கால் பண்ணாரு.

அவரு கிட்டயும் அதே கேள்வி.
1 நிமிஷம் பதிலே இல்ல,
" அண்ணே, பதில் சொல்லுங்க அண்ணே,"

"டேய், பக்கத்துல சஜித் இருக்காராடா?"
"இருக்காருன்னே"
"ஸ்பீக்கர் ஆன் பண்ணுடா"
ஸ்பீக்கர் ஆன் பண்ணா, எனக்கு ஆப் அப்டிங்கர உண்மை தெரியாமலே, நானும் ஆன் பண்ணா,
"சஜித், இவனுக்கு நீங்க இன்னும் மிட் இயர் ரிவியு பண்ணலையாம், ஒன்-2-ஒன் கூட்டிட்டு போங்க!" என்றபடி ஆப்பை விதைத்தார்.

நிமிட நேரத்தில் நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்த நான் தப்பித்து ஓட முயற்சி செய்ய,
சஜித், "நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டான்" என்ற மகிழ்ச்சியில்,
" ராம்! பக்கத்துல ஏதாவுது மீட்டிங் ரூம் காலியா இருக்கான்னு பாருங்க!"
"Dominic, அவன புடிங்க என்றார்"
"சஜித்! தயவு செய்ஞ்சு.. வேண்டாம், விட்டுடுங்க, அண்ணே காப்பாத்துங்க" என்று கதறியதை யாரும் பொருட்படுத்தவேஇல்லை.


(சின்ன கவுண்டர் படத்துல, கடல் தண்ணி சந்தேகம் கேட்ட செந்தில, தண்ணிக்குள்ள எட்டி உதைச்சுட்டு, கவுண்டமணி ஒரு வசனம் பேசுவாரு பாருங்க, அத மைன்ட்ல ஒரு தடவ ஓட்டி பார்த்துட்டு கீழ போங்க)

ஸ்பீக்கர்ல Jaggu சத்தமா, " போடா போ! பெங்களூர் வந்ததுல இருந்து அவருக்கு மட்டும்தான் முடி கொட்டவேஇல்லயாம்,
அவரு கிட்ட கேளு சொல்லுவாரு,"

"அண்ணே! வேண்டாம்னு சொல்லுங்க"

"கண்ட நேரத்துல கண்ணு முழிச்சு வேல செய்யிற நாயிக்கு, லொள்ள பாரு, லோலாயிதனத்த பாரு"

"அண்ணே! நீங்களும் பதில் சொல்லல"

"பேச்ச பாரு, பழமைய பாரு,"

"அண்ணே! பதில் சொல்லுங்கண்ணே"

"வந்தேன், எட்டி இடுப்பு மேல மிதிச்சி புடுவேன்"

fadeout ஆன என் குரல் உங்களுக்கு கேக்குதா?

"அண்ணே, என் கேள்விக்கு பதில் சொல்லுங்க அண்ண்ண்ண்ண்ணே"

No comments:

Post a Comment