Monday, January 9, 2012

தானே

அலுவலகத்தில் ஒரு தோழி எழுதிய பதிவு இது.
தங்களுக்கு தெரிந்த அனைத்து விவசாய நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பதிவு உதவும் என்பதால் பகிர்கிறேன்.

தங்களால் இயன்ற அளவு இதை பகிரலாம்.

=====================================================================================================================
தானே புயல் சீற்றத்திற்கான நிவாரண செய்திகளை கேட்ட பொழுது, என் அம்மா மூலம் ஒரு உண்மையை உணர முடிந்தது!! கடலூர், பண்ரூட்டி பகுதிகளில் பெரும்பாலும் பயிர் செய்யப்படுவது முந்திரி மற்றும் பலா தான்! இம்மரங்கள் வளர்ந்து பலன் தர குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளாவது எடுக்கும்!!

அப்படியெனில், தானே புயலில் வேரோடு விழுந்தது முந்திரி - பலா மரங்கள் மட்டுமல்ல; அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமும் தான்!!! அரசின் நிவாரண தொகை இந்நிலைமையை சீர் செய்ய போதுமானதா என்பது கேள்விக்குறியே?! விவசாயத்திற்கான காப்பீடு எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பற்றி எனது நண்பர் ஒருவரோடு பேச நேர்ந்தது!!

அந்த உரையாடலின் பொழுதும், கோவை தமிழ் நாடு விவசாய கல்லூரியின் பின்வரும் இந்த வலைதளத்தை http://agritech.tnau.ac.in/crop_insurance/crop_insurance_scheme.html அலசிய போதும் தான், விவசாயத்திற்கான காப்பீடுகள் பற்றி கொஞ்சம் அதிகமாகவே எனக்கு தெரிய வந்தது!!பெரும்பான்மையான விவசாயிகளுக்கு காப்பீடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா என்பது எனது ஐயம்!! இவற்றின் பயன்களை விவசாயிகளுக்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளை, நம் ஊடகங்கள் கவனிக்க மறப்பது மேலும் வேதைனையான விஷயம்!! ஒருவேளை, ஐந்தாண்டு திட்டங்களின் இம்முயற்சிகள் “வெளிப்படையாக” செயல்படுத்தபடும் போது, “தற்கொலைக்கு தள்ளப்படும் விவசாயிகள்!” என்ற தலைப்புச் செய்திகள் குறையலாம்!!

தானே புயலில் இறந்தோருக்கான இரங்கலையும், இழந்தோருக்கான பிரார்த்தனைகளையும் இங்கே பதிவு செய்கிறேன்!!
====================================================================================================================

- நன்றி அனு.

No comments:

Post a Comment