Wednesday, April 3, 2013

வனவிலங்கு கணக்கெடுப்பு : மேகமலை


"எட்வின், வெள்ளிக்கிழமை லீவ் வேணும். தேனீ போகணும்"
"என்னப்பா விஷயம்?"-ன்னு கேக்க மாட்டாரு! நாமளே சொல்லுவோமே!
"சென்சஸ் எடுக்கப்போறேன்! மேகமலை பக்கம்."
"அனிமல் சென்சஸா? குட்.. எந்த இடம் சொன்னீங்க?"
"மேக மலை. பேராண்மை படத்துல வருமே! அந்த பக்கம்!"

"பாத்துப்பா! பத்திரமா போயிட்டு வாங்க! மண்டே வந்துருவீங்க இல்ல"
"கண்டிப்பா வந்துருவேன்" (உயிரோட இருந்தா!!)
====================================================================
"இதுதான உங்களுக்கு முதல் சென்சஸ்? காட்டுக்குள்ள பாத்து இருக்கனும்ங்க.."
"அதுதான் போன வாரம் கூட ஹோசூர் போனேன் இல்ல, அப்புறம் என்ன புதுசா சொல்றீங்க!"
"அது வேற, நாம பாத்தது எல்லாம் ட்ரை பாரெஸ்ட், இல்லன்னா, ப்ளெய்ன்(சமவெளி)-ல இருக்குற பாரெஸ்ட். இதுதான் நிஜ காடு! அதுக்குதான் சொல்றேன்."
என்னோட சீனியர் சொல்லிட்டு இருக்காரு! நான் காட்டுக்குள்ள போகப் போற மெதப்புல,
"சோப்பு போட்டு குளிக்காதீங்க, சென்ட் அடிக்காதீங்க.
"வெள்ளை, பளீர் கலர்ல ட்ரெஸ் போடாதீங்க! (சாணி கலர்-ல தான் போடணுமா).
முக்கியமா, ஆர்வக் கோளாறுல எந்த மிருகத்துக்கும் பக்கத்துல போகாதீங்க!! குறிப்பா, யானை, காட்டு மாடு"
லேசா, அட்ரினலின் சுரக்க ஆரம்பிக்குது..
====================================================================
"நீங்க நடப்பிங்கதானே? உங்களுக்கு கழுகுமலை பீட், போட்டிருக்கேன். கேரளா பார்டர். லக் இருந்தா யானையெல்லாம் கூட பார்க்கவேண்டி வரும்."
அறிமுகக்கூட்டம் முடிஞ்சு, பீட் பிரிக்கும் போது, வனம் - அமைப்போட இயக்குனர் டாக்டர். ராஜ் சொல்லும்போது, கூட வந்த எல்லாரும், வயித்தெரிச்சலோட பாக்குறது தெரியுது.
====================================================================
"ரெஸ்ட் எடுக்கும்போது, சும்மா உக்காராம, ஒரு குச்சி எடுத்துட்டு பக்கத்துல இருக்குற சருகுகளை கலைச்சு பாருங்க.
"கிரீன் பிட் வைப்பர்"- கூட பாக்கலாம். ஆனா, குச்சி இருக்கட்டும் கைல. வெறும் கையவோ, இல்ல காலையோ விட்டு கிளறி பாக்காதீங்க.
வாய்ப்பு இருந்தா ராஜ நாகம் கூட அகப்படலாம்." -ன்னு சொல்லிட்டே இன்னொருத்தர அறிமுகப்படுத்துனாரு வனம் அமைப்பைச் சேர்ந்த ஒருத்தர்.

====================================================================
"சார், 2 வருஷம் முன்னாடி, ஒரு வீட்டுக்குள்ள கிங் கோப்ரா புகுந்துடிச்சு-ன்னு நாங்க எல்லாரும் ரெஸ்க்யு-க்கு போயிருந்தோம்.
நான்தான் பரண் மேல ஏறி அவன புடிச்சேன். அவன் வால கவ்விகிட்டு, கயிற புடிச்சி கீழே இறங்கிட்டு இருந்தேன்."

"வாலை மட்டும் புடிச்சு எப்டிங்க? கொத்தல?"
"தலை கீழ தொங்கும் போது, அவனால எந்திரிக்க முடியாது.
(என்னவோ, கூடப் பொறந்த தம்பி மாதிரி, இவ்ளோ உரிமையா பேசுறானே!)
அவன் 10 அடி நீளம் இருந்திருக்கான். எனக்கு அது மைண்ட்லையே இல்ல. பாதி இறங்கும் போது, அவனுக்கு கீழ சப்போர்ட் கெடைச்சு அப்டியே மேல ஏறி இங்க நச்சுன்னு போட்டுட்டான்.."" ன்னு சொல்லி வலது பக்க இடுப்ப காட்டுனாரு (பேன்ட்டோட தான்). டாக்டர் ஊசி போடுற இடத்துல.
"அய்யயோ! அப்புறம்" (எனக்கு அல்லு விட்டுருச்சு)
"2 வருஷம், வலது பக்கம் வேலையே செய்யல. பிசியோதெரபி முடிஞ்சு இப்போதான் சரி ஆயிருக்கு, இருந்தும் கூட, லேசா இன்னும் இருக்கு.."
என்ற நண்பருக்கு என் வயது மட்டுமே இருக்கும்.. காலை இழுத்து இழுத்து நடப்பது, கைகளை நீளமான நிலையிலேயே பெரும்பாலும் வைத்திருப்பது, என இன்னும் கூர்ந்து கவனித்தால் வேறுபாடு தெரிகிறது..
"இப்போ,"
"இப்போ, வெள்ளிமலை போக போறேன். அங்க கிங் கோப்ரா இருக்குதாம். பாத்துட்டு வரணும்ன்னு இந்த பீட் கேட்டு வாங்கி இருக்கேன்"
என்று கூறியவரை பார்க்கப் பார்க்க, ஏதோ ஒரு உணர்வு. பெருமையா? மரியாதையா? அனுதாபம் மட்டும் கண்டிப்பாக இல்லை.
====================================================================
உணவுநேரம்:
எனக்கு நல்ல பீட்-ன்னு சொல்லிட்டாங்களே! அது மட்டும் போதுமா? எல்லாரையும் வெறுப்பேத்திட்டு இருந்தேன்!
"ஹாசன் உனக்கு?"
"பொட்ட(ல்)க்காடு மச்சி.. நாம் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா?"
"யார்டா நீயி? கெளம்பு"
====================================================================
"உங்களுக்கு பாஸு?" (யாருன்னே தெரியாது, இருந்தாலும் என்ன மொறைச்சு பாத்துட்டே இருந்தாரு)
"இங்க தான் பக்கத்துல, 3 கிலோ மீட்டர்"
"?!" (என்ன ரியாக்ஷன் கொடுக்க?)
"அங்க என்ன இருக்கும்-ன்னு கேட்டுக்குங்க, யார்கிட்டயாவது"
"மயில்தான் இருக்குமாம். வேற எதுவும் கெடையாதுன்னு சொல்லிட்டாங்க"
(பாவம், ரொம்ப நொந்து போய் இருக்காரு. பேச்ச மாத்தலாமே!!)
"இது 550D தான? லென்ஸ் நீங்க தனியா வாங்குனீங்களா? "
"" (பதிலே இல்ல, பார்வை மட்டும் தான்)
"அட, ப்ரீயா விடுங்க. உள்ள எடுத்துட்டு போறீங்க இல்ல?"
"ஆமா இனிமேல் எடுத்துட்டு போய், என்ன செய்ய?
இனிமேல் நீ வயசுக்கு வந்தா என்ன? வரலன்னா என்ன?"
(சத்தியமா கவுண்டர் சொல்லும்போது, இந்த வசனத்துல இவ்ளோ வலி இருக்கும்னு நினைக்கவே இல்ல.) :D
====================================================================
பில்ட்-அப் பலமா இருக்கில்ல, நான் காட்டுக்குள்ள போய் என்ன பண்ணேன்? எப்படி இருந்தது?
எல்லாத்தையும் இப்பவே சொல்ல ஆசைதான்..
இன்னொரு நாள் சொன்னாலும் தப்பு இல்ல.

No comments:

Post a Comment